பங்காளிக் கட்சிகளுக்கிடையே முறுகல் நிலை; 2022 இல் மாகாணசபைத் தேர்தல்?

பங்காளிக் கட்சிகளுக்கிடையே முறுகல் நிலை; 2022 இல் மாகாணசபைத் தேர்தல்?


நான்கு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இழுபறி நிலையிலுள்ள மாகாண சபைத் தேர்தலை அடுத்தாண்டின் ஆரம்பத்தில் நடத்துவதற்கான அநேக சாத்தியங்கள் உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையே ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாத காரணத்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும் சில மாதங்களாகும் என தெரிவிக்கபடுகிறது.


4 ஆண்டு காலமாக இழுபறி நிலையிலுள்ள மாகாண சபைத் தேர்தலை புதிய முறைப்படி நடத்துவதா? அல்லது பழைய முறைப்படி நடத்துவதா? என்ற காரணத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாகாண சபைத் தேர்தலை அடுத்தாண்டின் ஆரம்பத்தில் நடத்துவதற்கான அநேக சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  


மாகாண சபை உறுப்பினர்களில் 70 சதவீதவீதமானோர் தொகுதிவாரியாகவும் , 30 சதவீதமானோர் விகிதாசார முறையிலுமாக கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. எனினும், ஒரு தொகுதியில் ஒரே கட்சியைச் சேர்ந்த மூவரை வேட்பாளர்களாக நிறுத்தும் யோசனைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் இதுவரையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.


இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் மாவட்டத்துக்கு தலா 2 மேலதிக ஆசனங்கள் வழங்குவது குறித்த யோசனைக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையே முடிவு எட்டப்படவில்லை.


மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பங்காளிக் கட்சிகளிடையேயான சந்திப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி காலை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.


-எம்.எம்.சில்வெஸ்டர்


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.