
அந்த பேச்சுவார்த்தைக்கு பசில் ராஜபக்ஷவும் வருகை தந்தார். ரவூப் ஹக்கீமின் முழு சம்மதத்துடன் தான் 20க்கு ஆதரவு வழங்கினோம்.
நான் 20ஆம் திருத்தத்திற்கு எதிர்த்து வாக்களிக்கிறேன். நீங்கள் அதனை ஆதரித்து வாக்களியுங்கள் என பசில் ராஜபக்ஷவுக்கு முன்னிலையில் ரவூப் ஹக்கீம் எமக்கு அனுமதி தந்தார் என முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், 20ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்த குழுவின் முக்கியஸ்தருமான ஹாபிஸ் நஸீர் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.