அழிவை நோக்கி காலடி வைக்கும் இலங்கை - ஆனந்த தேரர் அதிரடி

அழிவை நோக்கி காலடி வைக்கும் இலங்கை - ஆனந்த தேரர் அதிரடி

மாகாணசபை முறைமை என்பது கொரோனா வைரஸை விடவும் பாரதூரமானதாகும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போதே நாம் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தோம்.

இலங்கையைப் போன்ற சிறிய நாட்டுக்கு மாகாணசபை முறைமை பொறுத்தமானதாக இருக்காது. எனவே மாகாணசபை முறைமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமாயின் அது பாரிய அழிவாகும்.

எனினும் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி மாகாணசபைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.