போலி நாணயத்தாள்; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

போலி நாணயத்தாள்; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வரும் அபாயம் காணப்படுவதால் அது தொடர்பில் அதிக விழிப்புடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


ஐயாயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதால், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக பொலிஸார் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


$ads={1}


அக்கரைப்பற்று - ஒலுவில் பகுதிகளில், 124 போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.


எனவே, நாணயத்தாள்களை பயன்படுத்தும்போது அதிக அவதானம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post