இந்த வருட இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணம் தொடர்பாக வெளியான செய்தி!

இந்த வருட இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணம் தொடர்பாக வெளியான செய்தி!


இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்ண்டு சவூதி அரேபியா வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சவூதியின் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த விதிக்கு இணங்காதவர்கள் ஹஜ் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி “ஹஜ்ஜுக்கு வர விரும்புவோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாகும். அனுமதி பெற இது ஒரு முக்கிய நிபந்தனையாக இருக்கும்.” என்று சவூதி அரசை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


$ads={1}


பொது சுகாதார கண்ணோட்டத்தில் ஹஜ் பாதுகாப்பான முறையில் செய்யப்படுவதை உறுதிசெய்ய இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.


தொற்றுநோய் காரணமாக 2020’ல் சவூதி இந்த யாத்திரையை ரத்து செய்தது. அதன் பின்னர் அது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களை ஹஜ் செய்ய அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.