PHOTOS : பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் ரயிலுடன் மோதி விபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் ரயிலுடன் மோதி விபத்து!

மன்னார் – தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (16) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த தனியார் பேருந்து கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையை பேருந்து கடக்க முயன்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அதிகமாக பாடசாலை மாணவர்களே காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.