பலகோடி பெறுமதியான சொத்தை வலுகட்டாயமாக அபகரித்த அரசியல்வாதி!

பலகோடி பெறுமதியான சொத்தை வலுகட்டாயமாக அபகரித்த அரசியல்வாதி!

கொழும்பு 07 துன்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் மதிப்புமிக்க தனி நபரொருவரின் சொத்துக்களை மோசடி செய்ததாக இலங்கை அரசியல்வாதி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தனது மனைவியுடன் (வைத்தியர்) வசித்து வரும் வைத்தியர் தனது சொத்தினை அரசியல் சக்தியைப் பயன்படுத்தி பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் இரு அமைச்சர்கள் இதற்கு ஆதரவளிப்பதாக மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குத்தகை காலாவதியான பிறகு வீட்டை திரும்பக் கேட்டுக் கொண்ட போது, எந்தவொரு பணத்தையும் செலுத்தாமல் பல ஆண்டுகளாக இந்த இடத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இணையவழி அலைவரிசையொன்றுக்கு அளித்த பேட்டியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post