நடுவானில் விமானத்தின் அவசரக் கதவை திறக்க முயற்சி - விமான நிலையத்தில் பரபரப்பு!

நடுவானில் விமானத்தின் அவசரக் கதவை திறக்க முயற்சி - விமான நிலையத்தில் பரபரப்பு!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் அவசரக் கதவை (எமர்ஜென்சி எக்ஸிட்) திறக்க முயற்சித்த பயணி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலம் இந்தியா, வாரணாசி விமான நிலையத்திலுள்ள ஸ்பெஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறிய தாவது:

இன்று (29) வாரணாசிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது நடுவானில் கவுரவ் என்ற பயணி விமானத்தின் அவசரக் கதவை திறக்க முயற்சித்தார்.

இதைப் பார்த்த விமானப் பணிப்பெண்கள், மற்ற பயணிகள் உதவியுடன் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

விமானம் தரையிறங்கும் வரை அவரை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

விமானம் தரையிறங்கிய பின்னர் அவர் வாரணாசி விமானநிலையத்திலுள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரிடம் (சிஐஎஸ்எஃப்) ஒப்படைக்கப் பட்டார். இந்த சம்பவம் நடந்த போது விமானத் தில் 89 பயணிகள் இருந்தனர். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விமானம் புறப்பட தொடங்கியதும் அவர் இருக்கையில் உட்காராமல் அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தார். விமானம் நடுவானுக்கு சென்றதும் அவர் திடீரென எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்துள்ளார்” என்றார்.

இந்த சம்பவம் வாரணாசி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post