உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது! இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது! இலங்கைக்கு கிடைத்த இடம்!


உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மொத்தம் 149 நாடுகளில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது.

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

மொத்தம் 149 நாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த ஒன்பது இடங்களில் முறையே டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, ஸ்வீடன், லக்ச்ம்பர்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

முதல் 10 இடங்களில் ஐரோப்பா அல்லாத நாடாக நியூசிலாந்து இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 129ஆவது இடத்தில் இலங்கை இடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உலகில் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளாக ஆப்கானிஸ்தான், அதைத் தொடர்ந்து லெசோதோ, பொட்ஸ்வானா, ருவாண்டா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பல ஆசிய நாடுகள் கடந்த ஆண்டு தரவரிசையில் இருந்ததை விட முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 94வது இடத்திலிருந்த சீனா இவ்வருடம் 84வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேநேரம் இந்தியா 139ஆவது இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.