நாடு முழுவதுமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முகாம்களை நிறுவ நடவடிக்கை!

நாடு முழுவதுமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முகாம்களை நிறுவ நடவடிக்கை!

காடழிப்பு இடம்பெறுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சோமாவதி வனம், கிண்ணியா மற்றும் வன்னி பகுதிகள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை ஸ்தாபிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் காடழிப்பு இடம்பெறும் இடங்களை தேடி அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post