வங்கிக் கடனை செலுத்தாவிட்டால் சொத்துக்களை கையகப்படுத்துவதா? பிரதமரின் அறிவிப்பு!

வங்கிக் கடனை செலுத்தாவிட்டால் சொத்துக்களை கையகப்படுத்துவதா? பிரதமரின் அறிவிப்பு!

வங்கிக் கடனை செலுத்தாவிட்டால் சொத்துக்களை கையகப்படுத்துவதா? பிரதமரின் அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார்.


வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.


அதன்படி, தொழில்முனைவோரின் நிதிப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய வங்கிகளுடன் இணைந்து இறுதி முடிவை எட்டுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.


இது போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், எந்தவொரு தரப்பும் பாதிக்கப்படாத வகையில் அவற்றைத் தீர்ப்பது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


வங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத எந்தவொரு தரப்பினருக்கும், வங்கி தரப்பிற்கும் இடையில் நியாயமான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீடு தேவை என்று தெரிவித்த பிரதமர், இது தொடர்பாக சட்டப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட அரசு நிறுவனம் அல்லது அதிகாரியை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.


அதன் மூலம் லீசிங் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் பொருந்தும் கடன் வழங்குநர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.


-தெரண


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.