கொரோனா நல்லடக்கம்; இரணைதீவு மக்களால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா நல்லடக்கம்; இரணைதீவு மக்களால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!


கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு பகுதி மக்கள் நாளை (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இரணை தீவு பங்குத்தத்தை அருட்தந்தை மடுத்தீன் அடிகளார் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லீம் சகோதரர்களால் பல்வேறு பகுதிகள் முன்னொழியப்பட்ட போதிலும் அவற்றை தவித்து யுத்ததால் இடம் பெயர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் 2017 ஆம் ஆண்டு பல கட்ட போராட்டங்களின் பின்னர் மீள் குடியேறிய எமது இரணைதீவு பகுதிகளில் உடல்களை அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கவலை அழிப்பதுடன் தங்களுக்கு மகிழ்ச்சி இன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இரணைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைப்பதனால் நீர் ஊடாக  தொற்று பரவ வாய்புள்ளதாகவும் அண்மைக் காலமாகவே இரணைதீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இம்முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதிலை எனவும் தெரிவித்துள்ளார்.

$ads={1}

தற்போது 165 குடும்பங்கள் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகியுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் இணைந்து நாளைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் யாழ். மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவுத்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.