எரிவாயுக்கு உலக சந்தையில் பாரிய விலை மாற்றம்; தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

எரிவாயுக்கு உலக சந்தையில் பாரிய விலை மாற்றம்; தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!


உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்ஙகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அதற்கமைய இன்றைய (08) அமைச்சரவை கூட்டத்தில் எரிவாயு விலை அதிகரிப்பு யோசனை ஒன்றை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் கொண்டு வரப்படவுள்ளது. அதற்கு அமைச்சரவை அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் எரிவாயு விலையை அதிகரிக்காமையினால் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக உலக சந்தையில் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வருகிறது. டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக் குறைவு காரணமாகவும், இறக்குமதிக்கான விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உள்ளூர் எரிவாயு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

$ads={1}

கடந்த எட்டு மாதங்களாக தங்கள் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 300 மில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எரிவாயு நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் எரிவாயு விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

எரிவாயுவிற்கான விலை சூத்திரம் இருந்தாலும், அதிகாரிகள் அதை அனுமதிக்காததால் எரிவாயு வர்த்தகம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்று நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.