தேவையேற்பட்டால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறங்கும்! -கேர்ணல் ஹரிஹரன்

தேவையேற்பட்டால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறங்கும்! -கேர்ணல் ஹரிஹரன்


இலங்கைக்கு பாதிப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டால், தேவையேற்பட்டால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறங்கும் என இந்தியாவில் இருக்கக்கூடிய மூத்த இராணுவ கேர்ணல் தர அதிகாரி, அதனோடு பாதுகாப்புத் துறை தெற்காசிய விவகாரங்கள் தொடர்பில் மிகவும் ஆழமான பார்வையோடு இலங்கை விடயங்களை மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்க கூடிய மூத்த இராணுவ அதிகாரி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.


சகோதர செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது இந்தியாவின் இராணுவ பிரசன்னம் அல்லது இராணுவ ரீதியான ஒரு நிலைப்பாடு இலங்கைக்குள் ஆழமாக இருக்கிறது. அதனால், எந்த நாடு அதற்குள் நுழைந்தாலும் எந்த பாதிப்பும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,


அப்படியில்லை பாதிப்பு இருக்கும். ஆனால் அந்த பாதிப்பை இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்து தகர்க்க முடியும். இந்தியாவிடம் அத்தகைய வலிமை உள்ளது.


அதனால் தான் இலங்கையை சீனா எவ்வளவு பயமுறுத்தினாலும் இந்தியா அதன் பின்னணியில் எப்போதும் இருக்கும். ஏனெனில் இலங்கையை சீனா தாக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து.


அதேபோல் இந்தியாவின் மீது தாக்குதல் நடந்தால் இலங்கையின் மீதும் ஓரளவு பாதிப்பு இருக்கும் என கூறியுள்ளார்.


அதேவேளை, ஒரு போர் கால சூழ்நிலை அல்லது ஒரு பேராபத்து சூழ்நிலை போன்ற இலங்கைக்கு பாதிப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டால், இலங்கை கேட்டுக் கொண்டால் கட்டாயம் இந்திய இராணுவத்தை இந்தியா இலங்கைக்கு அனுப்பும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post