காது, மூக்கு, உதடுகளை துண்டித்து வேற்றுக்கிரகவாசியாக மாறிய இளைஞன்!

காது, மூக்கு, உதடுகளை துண்டித்து வேற்றுக்கிரகவாசியாக மாறிய இளைஞன்!


பிரிட்டனை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மூக்கு, காது, உதடு மற்றும் நாக்குகளை அறுத்துக்கொண்டு தன்னை வேற்று கிரக வாசியாக உருமாற்றிக்கொண்டுள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.


அந்தோணி லோஃப்ரெடோ (32) என்ற இளைஞரே இவ்வாறு விவரீத தோற்றத்திற்கு மாறியுள்ளார்.


பார்ப்பதற்குத்தான் விபரீத தோற்றமே தவிர, இந்த தோற்றம் அவருக்கு மிகப் பிடித்துள்ளதாம். ஹொலிவுட் படங்களில் காட்டப்படும் வேற்றுகிரகவாசிகள் போல மாற வேண்டும் என்பதற்காக அவரே மெதுமெதுவாக இந்த தோற்றத்தை பெற்றுள்ளார்.


அறுக்கப்பட்ட சிறிய காதுகள், மூக்கு, வெட்டப்பட்ட உதடுகள் மற்றும் இரண்டாக பிளக்கப்பட்ட நாக்குடன் பயங்கரமாக தோற்றமளிக்கும் அவர், தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயர் கருப்பு வேற்றுகிரகவாசி (The Black Alien) என்பதாகும்.

$ads={1}


பெயருக்கு ஏற்ப கண்கள் உள்பட அவரது உடல் முழுவதிலும் டாட்டூ வரைந்துகொண்டு கருப்பாக மாறியுள்ளார்.


கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தன்னை உருமாற்றும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அதற்கு அவர் வைத்த பெயர் கருப்பு வேற்றுகிரகவாசி திட்டம்.


ஒவ்வொரு முறை சிறு சிறு மாற்றங்களை செய்துவந்த அந்தோணி அவற்றை முழுமையாக வெளியிட்டுள்ளார்.


அவரது மேலதிக விபரங்களை அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் காணலாம். https://www.instagram.com/the_black_alien_project/
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post