நேற்று இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்களின் விபரம்!

நேற்று இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்களின் விபரம்!

இலங்கையில் நேற்றைய தினம் (05) மாத்திரம் 350 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகளவில் அதாவது 94 பேர் கொழும்பு மாவட்டத்திலும் இரத்தினபுரியில் 82 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதுளையில் 31 பேரும் அனுராதபுரத்தில் 17 பேரும் கம்பஹாவில் 14 பேரும் கேகாலையில் 13 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மன்னர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய தலா 12 பேருக்கும் காலி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவையில் தலா 11 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்தோடு கழுத்துறையில் 09 பேருக்கும் 08 யாழ்ப்பாணத்தில் 08 பேருக்கும் திருகோணமலை மற்றும் கண்டியில் தலா 06 பேருக்கும் மாத்தறையில் 04 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 960ஆக உயர்ந்துள்ளது.

இதில் 81 ஆயிரத்து 321 பேர் குணமடைந்துள்ளதுடன் 3 ஆயிரத்து 146 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 493 பேர் மரணமடைந்துள்ளமை குறி

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.