பாராளுமன்றிற்கு படகில் வர அனுமதி பெற்ற முதல் பாராளுமன்ற உறுப்பினர்!

பாராளுமன்றிற்கு படகில் வர அனுமதி பெற்ற முதல் பாராளுமன்ற உறுப்பினர்!


பாராளுமன்றத்திற்கு படகில் வருவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவின் கோரிக்கைக்கு சபாநாயரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.


வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உத்தியோகபூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.


அதேபோல், எதிர்காலத்தில் கொழும்பு நகரின் வாகன நெரிசலுக்கு தீர்வாக இதனை செயற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


$ads={1}


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,


இலங்கையில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் படகில் பாராளுமன்றம் செல்லும் நாள் இன்று. நான் கடந்த கன்னி அமர்வின் போது உத்தியோகபூர்வமற்ற வகையில் பாராளுமன்றத்திற்கு சென்றேன். எனினும் இன்று அனைத்து சட்டத்திட்டங்களுக்கு அமைவாக நீர் மார்க்கமாக பாராளுமன்றத்திற்கு செல்ல புறப்பட்டேன். இதனூடாக நீர் போக்குவரத்தை மேம்படுத்துவற்கு எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.