ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமிக்கவுள்ள பேராயர்!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமிக்கவுள்ள பேராயர்!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை படித்ததன் பின்னர், அதிலுள்ள குறைபாடுகளை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டுவதற்கு தாம் தயாரென பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


$ads={1}


இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் நேற்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.