மிகவும் மோசமான கட்டத்தில் இலங்கை - பகிரங்கமானது!

மிகவும் மோசமான கட்டத்தில் இலங்கை - பகிரங்கமானது!

இலங்கையில் பெரும்பான்மைவாதம், இனவாதம் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவை இப்போது மிகவும் மோசம் அடைந்திருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் பெரும்பான்மைவாதம், இனவாதம் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவை இப்போது மிகவும் மோசமாக அடைந்திருக்கின்றன.

அண்மையில் இரவில் மிகவும் தாமதாக நடமாடிய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டமை, இளம் சூழலியலாளர் மீதான அடக்குமுறை போன்ற சம்பவங்கள் தற்போது அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் சுதந்திர ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.