சாரதியை தாறுமாறாக தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

சாரதியை தாறுமாறாக தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

பன்னிப்பிட்டிய பகுதியில் லாரி சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொலிஸார் நேற்று விசாரணைகளைத் தொடங்கினர்.

போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கருதப்படும் குறித்த பொலிஸ் அதிகாரி, சாலையின் நடுவில் ஒருவரைத் தாக்கியதை அந்த வீடியோ காட்டுகிறது.

மகரகம காவல்துறையின் போக்குவரத்து ஓ.ஐ.சி.யியை லாரி மோதியதை அடுத்தே அந்த சாரதி கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post