குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க என் கடைசி உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன்! -வசீம் ரிஸ்வி

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க என் கடைசி உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன்! -வசீம் ரிஸ்வி


அல்-குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி இந்திய உத்தரபிரதேச ஷியா மத்திய வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு சர்ச்சையை கிளப்பியுள்ளது.


வசீம் ரிஸ்வி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-


இந்த வசனங்கள் பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன என்றும் அவை உண்மையான குர்ஆனின் ஒரு பகுதியாக இருக்க முடியாது, ஆனால் பின்னர் ஒரு காலத்தில் செருகப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதனை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா வாலி ரஹ்மானி  ரிஸ்வி  விளம்பரத்திற்காக இதனை செய்து உள்ளதாக கூறினார்.


மஜ்லிஸ்-இ-உலமா-இ-ஹிந்தின் பொதுச் செயலாளர் மவுலானா கல்பே ஜவாத், ரிஸ்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். லக்னோவின் பரா இமாம்பராவுக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை குர்ஆனைப் பாதுகாப்பதற்காக ஒரு அரங்கையும் ஏற்பாடு செய்தார்.


இதனிடையே, வசீம் ரிஸ்வியின் தலையைகொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசு தருவதாக கடந்த 13ஆம் திகதி அமீருல் ஹசன் ஜாப்ரி என்பவர் அறிவித்துள்ளார். 


இது தொடர்பான வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது. அமீருல் ஹசன், உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில், அமீருல் ஹசன் மீது மொராதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இது குறித்து மொரதாபாத் மாவட்ட ஏ.எஸ்.பி அமீத் குமார்ஆனந்த் கூறும்போது, 'இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்கி பகையை வளர்க்கும் வகையில் வழக்கறிஞர் அமீருல் ஹசனின் வீடியோ உள்ளது. இதற்கான சாட்சியங்கள் கிடைத்தவுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.


$ads={1}


இந்நிலையில், ஷியா வக்ஃப் குழுவின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி ஒரு வீடியோவில்  "குர்ஆனின் 26 வசனங்களை அகற்றுவதற்கான போரில் தனது கடைசி மூச்சு வரை போராடுவேன். எனது மனைவி, குழந்தைகள், சகோதரர் மற்றும் உறவினர்களால் நான் வெளியேற்றப்பட்டேன். ஆனால் எனக்கு கவலையில்லை. நான் சரியான பாதையில் தான் இருக்கிறேன், கடைசி மூச்சு வரை இந்த போரில் போராடுவேன். நான் தற்கொலை செய்து கொள்வேன்; ஆனால் விட்டு கொடுக்க மாட்டேன்.” என ரிஸ்வி கூறியுள்ளார்.


நன்றி : தினத்தந்தி


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.