மோடியின் பங்களாதேஷ் விஜயம்; கலவரத்தில் 11 பேர் பலி!

மோடியின் பங்களாதேஷ் விஜயம்; கலவரத்தில் 11 பேர் பலி!


பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர பொன் விழாவில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு சனிக்கிழமை நாடு திரும்பினார். 


மோடி வருகைக்கு பங்களாதேஷிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி பங்களாதேஷுக்கு வந்து சேர்ந்த வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. 


இந்தியாவில் பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகளை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் கடும் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.


போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டபோது பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர்ப்புகை பிரயோகம் என போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் இதில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post