காணாமல் போனதாக கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிப்பு!

காணாமல் போனதாக கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிப்பு!


மீகொட - வெலிசெனவத்த பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக மீகொட பொலிஸ் நிலையம்  தெரிவித்துள்ளது.


முன்னதாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை, இந்த சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை கோரியிருந்தது.


சிறுமியின் தாய், கணவரை விவாகரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு புறப்பட்டார். அங்கு அவர் மறுமணம் செய்து கொண்டார்.


இதனையடுத்து சிறுமியின் தந்தை 2020 நவம்பரில் இறந்துவிட்டார், இந்நிலையில், அவரது தாத்தா, பாட்டி மற்றும் மாமா ஆகியோர் சிறுமியை பராமரித்து வந்தனர்.


எனினும், குழந்தையின் தாய் இலங்கைக்குத் திரும்பி வந்ததாகவும், குழந்தையை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்காக சட்டப்பூர்வ உதவியைப் பெற முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போதே சிறுமி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post