ஏப்ரல் 01 முதல் அறிமுகமாகவிருக்கும் புதிய சட்டம்!

ஏப்ரல் 01 முதல் அறிமுகமாகவிருக்கும் புதிய சட்டம்!


நுகர்வோர் பாதுகாப்புச் சபை மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையால் பதிவு செய்யாமல் கை சுத்திகரிப்பானை இறக்குமதி செய்வதையோ அல்லது விற்பனை செய்வதையோ தடைசெய்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வர உள்ளது.

சந்தையில் தரமற்ற கை சுத்திகரிப்பான் தயாரிப்புகள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு கட்டுப்படாதவர்களுக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சுத்திகரிப்பான்களின் பேக்கேஜிங் மற்றும் கொள்கலன்களில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையால் வழங்கப்பட்ட பதிவு எண்ணை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

$ads={1}

அத்தகைய பதிவு இல்லாதவர்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் பதிவு எண்ணைப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.