
நிலைமையை விளக்கிக் கூறி டென்வரில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
$ads={1}
எனினும் பதற்றப்படாமல் சாமர்த்தியமாக செயல்பட்ட விமான ஓட்டி, விமானத்தை டென்வர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். என்ஜினில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விமான என்ஜினில் தீப்பிடித்தபோது எடுத்த வீடியோ மற்றும் உடைந்த பாகங்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.