
குறித்த சம்பவத்தில் 58,000 ரூபா பணமும் 4 கையடக்க தொலைப்பேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்ளையர்கள் சிவில் உடையில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.