இன்று முதல் அனைத்து தொலைப்பேசி அழைப்புக்களையும் இலங்கை அரசாங்கம் செவிமடுக்கின்றதா? ITSSL வெளியிட்டுள்ள அறிக்கை!

இன்று முதல் அனைத்து தொலைப்பேசி அழைப்புக்களையும் இலங்கை அரசாங்கம் செவிமடுக்கின்றதா? ITSSL வெளியிட்டுள்ள அறிக்கை!


இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை


'புதிய தகவல் தொடர்பு விதிமுறைகள்' பற்றிய போலி செய்திகள் மீண்டும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) நேற்று (31) சமூக ஊடக இடுகை ஒன்றில் பொதுமக்களுக்கு தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது.

இன்று (01) முதல் 'புதிய தகவல் தொடர்பு விதிமுறைகள்' என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறும் ஒரு போலி செய்தி சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் என்ற வகையில், இந்த போலி செய்தி 2019 முதல் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான செய்தி என்றும், இதுபோன்ற தவறான பிரச்சாரங்களை பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை சமூக ஊடக பயனர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

போலி செய்தியின்படி, இலங்கையில் உள்ள அனைத்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் அழைப்புகள் ஆகியவை அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகின்றன, ஆனால் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள அனைத்து தரவையும் கண்காணிக்க அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.


ராஜீவ் யசிரு குருவிட்ட மெதிவ்
தலைவர்
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.