அடக்கம் செய்வதற்காக வழிகாட்டுதல்கள் தயார் நிலையில்!! -சுகாதார சேவைகள் பணிப்பாளர்
advertise here on top
advertise here on top

அடக்கம் செய்வதற்காக வழிகாட்டுதல்கள் தயார் நிலையில்!! -சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Asela-Gunawardena-Director-General-of-Health

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்காக வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அடக்கம் செய்வதற்கான இடங்கள் 3 அல்லது 4 நாட்களுக்குள் அடையாளம் காணப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் விசேட நிபுணர்கள் குழுவின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் இன்று (27)  இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.


பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்ட நல்லடக்க முறைமை கட்டமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


நீர் ஆதாரங்கள் காணப்படும் பகுதிகள், அதற்கான தூரம், அடக்கத்திற்கு தெரிவு செய்யப்படும் குழியின் ஆழம், உடல்களை கொண்டு செல்லும் முறைமை, கொண்டு செல்லும்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா? உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


$ads={1}


உடல்களை அடக்கம் செய்யக்கூடிய இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கை துரிதமாக இடம்பெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


இதனிடையே, உயிரிழப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்கும் விசேட வர்த்தமானி கடந்த 25ஆம் திகதி நள்ளிரவு வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.