ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் ஞானசார தேரர் மீது குற்றச்சாட்டு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் ஞானசார தேரர் மீது குற்றச்சாட்டு!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மீதும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கான பரிந்துரை 2014 ஆம் ஆண்டில் அலுத்கம மற்றும் பேருவளைவில் இன ரீதியான பதட்டங்களைத் தூண்டியது போன்ற என்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது என்று அறியப்படுகிறது.

அலுத்கம, பேருவளை மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் 2014 ஜூன் 15 முதல் 17 வரை நடந்தது, இதனால் களுத்துறை மாவட்டத்தின் தர்கா நகரில் குறைந்தது 04 பேர் உயிரிழந்து , 80 பேர் காயமடைந்து மற்றும் சொத்து சேதங்கள் ஏற்பட்டது அறிந்ததே.

இருப்பினும், இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு என்று பொதுபல சேனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.