பொலிஸ் போர்வையில் கொள்ளையர் கும்பல்! பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் போர்வையில் கொள்ளையர் கும்பல்! பொலிஸார் எச்சரிக்கை!


குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று பகல் வேலையில் இவ்வாறான இரண்டு கொள்ளை குழுக்கள் கதிர்காமம் நகரத்தில் மற்றும் பலப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு விகாரைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


அத்துடன் இந்த நாட்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.