மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிப்பு!

மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிப்பு!


போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தின் முன் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் தூக்கு தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைபடுத்துவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையில் மேலும் நீடிப்பதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவு பிறப்பித்தது.


மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் சில நீதிபதி மலல்கொட தலைமையிலான 05 நீதிபதிகளின் முன்னிலையில் நேற்று (11) எடுத்துக் கொள்ளப்பட்டது, இதன்போது இந்த நீதிபதி குழாமினால் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டது. இது தொடர்பான மனுவை செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி கவனத்தில் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


இந்த மனுக்களில் சில தரப்பினர் மாறியிருப்பதாகவும் மனுக்களின் தலைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மனு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதார் தரப்பினரின் சட்டதரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.


முன்னாள் ஜனாபதியினால் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதை சவாலுக்கு உட்படுத்தி மாற்றுக் கொள்கை கேந்திர நிலையம், தற்பொழுது மரண தண்டனை விதிக்கப்படடுள்ள கைதிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சில தரப்பினரால் 15 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


கடந்த சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன போதைபொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றவாளிகளாக சிறைச்சாலைகளில் உள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மத்தியில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக கைச்சாத்திடுவதாக தெரிவித்தார்.


இந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மாத்திரம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் சட்டதிற்கு முரணானது என இதன் மூலம் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள சட்டத்தின் முன் சம உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு உள்ள அடிப்படை உரிமையை மீறுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனால் தெரிவு செய்யப்பட்ட சிறைக்கைதிகள் சிலருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தின் படி அரசியல் யாப்பு மீறப்படுவதான தீர்மானத்தை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.