அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவானமைக்கான காரணம் இது தான்!!

அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவானமைக்கான காரணம் இது தான்!!

மஹியங்கனையில் இரு தொழிற்சாலைகளில் பரவிய கொரோனா தொற்று மற்றும் பி.சிஆர் இயந்திரங்கள் பழுதானமை காரணமாகவே அண்மைய நாட்களில் கொரோனா நோயாளர்கள் அதிகம் பதிவாகியதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மஹியங்கனையிலுள்ள இரண்டு தொழிற்சாலைகளின் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அனுராதபுரத்தில் ஒரு இயந்திரம் உட்பட பல பி.சி.ஆர் இயந்திரங்கள் தற்போது பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மாதிரிகளை பரிசோதிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பி.சி.ஆர் முடிவுகள் மொத்தமாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த சில நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையுமென்று COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பது குறித்து COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்திற்கு அறிவிக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.