நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை! ஞானசார தேரர்

நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை! ஞானசார தேரர்


நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லையென தாம் நம்புவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவால் எமக்கும் வழக்கும் தொடரப்போவதாக அண்மையில் பிரதான பத்திரிகையொன்றில் செய்தி வௌியாகியிருந்தது.


ஈஸ்டர் ஞாயிறு தொடர்பான ஆணைக்குழுவில் எம்மை குற்றவாளிகளுக்க மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை, நாம் என்ன தவறு செய்தோம்? இவ்வாறான விடயங்களுக்கு எமது மக்கள் முகங்கொடுக்க நேரிடும் என்பதை நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். அதே போன்று மீண்டும் இவ்வாறான வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடிப்படைவாத கருத்துக்களால் ஆயுதம் தரித்த குழுக்கள் இதுவரை செயலற்றதாக்கப்படவில்லை. 


அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான பிரதான சூத்திரதாரிகள் இன்று வௌியில் இருக்கின்றனர் என்றார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.