பாகிஸ்தான் பிரதமரின் வருகை; பிரதமர் விமான நிலையம் சென்று வரவேற்றார்!

பாகிஸ்தான் பிரதமரின் வருகை; பிரதமர் விமான நிலையம் சென்று வரவேற்றார்!


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு சற்று முன்னர் வருகை தந்துள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதமர் இம்ரான் கானுடன் வருகை தந்துள்ளனர்.

முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகன உதிரிப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் ஆகியோரை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

மேலும், அலரி மாளிகையில் இன்று மாலை முக்கியமான, இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக, வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.