பிரபல பாடசாலையின் மாணவர்களுக்கிடையே மோதல் - கூரிய ஆயுதம் கொண்டு தாக்குதல்!

பிரபல பாடசாலையின் மாணவர்களுக்கிடையே மோதல் - கூரிய ஆயுதம் கொண்டு தாக்குதல்!

பன்னல பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த இருவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மோதலில் மாணவர் ஒருவரின் பாதம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மாணவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தரம் 12 மற்றும் 13 இல் கல்வி கற்கும் மாணவர்களே மோதலில் காயமடைந்துள்ளனர்.

பாடசாலைக்கு கைடயக்கத் தொலைபேசியை கொண்டு சென்ற விடயத்தை முன்வைத்தே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக காவல்த்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post