ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையே கலந்துரையாடப்பட்ட விடயங்கள்!

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையே கலந்துரையாடப்பட்ட விடயங்கள்!


இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.


இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) காலை இடம்பெற்றிருந்தது.


மேலும், விவசாயத்துறை சார்ந்த தொழிநுட்ப மற்றும் அறிவுசார் விடயங்களை இரண்டு நாடுகளும் பரிமாற்றிக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுத்தல் மற்றும் நுகர்வோருக்கு மாணிய விலைகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொண்டு விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


அத்துடன், இலங்கையின் பொருளாதாரமானது பாகிஸ்தான் பொருளாதாரத்துடன் ஒத்திருப்பதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே காணப்படும் வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் சுற்றுலாத்துறையை அடிப்படையாக கொண்டு இரண்டு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post