முகநூல் காதலுடன் வீட்டைவிட்டு ஓடிய இளம் யுவதிக்கு நேர்ந்த கதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முகநூல் காதலுடன் வீட்டைவிட்டு ஓடிய இளம் யுவதிக்கு நேர்ந்த கதி!

தனது தொலைபேசி காதலனுடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு ஓடிச் சென்ற 20 வயதான அழகிய இளம் யுவதியொருவர், காதலனின் வீட்டிற்கு சென்றதும் அவர் யாரென தெரிந்தும் சாமர்த்தியமாக 119 அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு தப்பிப்பிழைத்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகக்கவசம் அணிந்தபடி யுவதியை வீட்டிற்கு அழைத்து சென்ற தொலைபேசி காதலன், முகக்கவசத்தை அகற்றியதும் வயோதிபர் என்பது தெரிய வந்ததை தொடர்ந்தே இந்த களேபரம் இடம்பெற்றது.

முகநூல் காதலனும், காதலியும் அரணாயக்க பொலிசாரால் பொறுப்பேற்கப்பட்டனர். யுவதி தனது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

நிலச்சரிவில் தனது மனைவி, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த 52 வயதான நபரே இந்த மன்மத வித்தையை காண்பித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தின், வசந்தகமவில் உள்ள செனேக சியபத கிராமத்தில் அவர் தற்போது தனியாக வசித்து வந்தார்.

முகநூல் வழியாக அறிமுகமான யுவதியொருவருடன் கடந்த ஆறு மாதமாக காதல் வசப்பட்டுள்ளார். தன்னை இளைஞனாக காண்பித்து முகநூல் காதலியுடன் பேசி வந்தார்.

கந்தளாய், அக்போபுர பகுதியை சேர்ந்த 20 வயதான அந்த யுவதியும், இளைஞன் ஒருவரை காதலிப்பதாக நினைத்து உருகி உருகி காதலித்துள்ளார்.

காதல் முற்றியதும், அந்த யுவதியை தன்னுடன் வாழ வருமாறு காதலன் அழைத்தார். யுவதி வீட்டை விட்டு வெளியேறி வந்தால், இருவரும் தனித்து வாழலாமென்றும் யோசனை சொல்லியிருந்தார்.

இதையடுத்து, கடந்த 11ஆம் திகதி இரவு தனது வீட்டிற்கு தெரியாமல் யுவதி வெளியேறினார். வீட்டிலிருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு அப்போபுர பேருந்து நிலையத்திற்கு சென்றார்.

குறிப்பிட்ட நேரத்தில் முகநூல் காதலனும் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அந்த நேரத்தில் பேருந்து நிலையத்தில் போதுமான வெளிச்சமிருக்கவில்லை. எனினும், தொலைபேசி அழைப்பின் மூலம் இருவரும் சந்தித்து, அவசர அவசரமாக மாவனெல்லைக்கு பேருந்தில் ஏறினர்.

தனது முகநூல் காதலனின் முகத்தை பார்க்க வேண்டுமென்ற துடிப்பு யுவதிக்கு இருந்தாலும், காதலன் முகக்கவசம் அணிந்திருந்ததால் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை.

பேருந்தில் மாவனெல்லைக்கு சென்றவர்கள், வேறொரு வாகனத்தில் வசந்தகம சென்றனர்.


$ads={1}

தனது காதலனின் வீட்டிற்கு வந்தபின் காதலன் முகக்கவசத்தை அகற்றும் போது, ​​தன்னை விட வயதான ஒருவரால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து யுவதி அழுததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யுவதி தனது பெற்றோருக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியதுடன், 119 அவசர இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அந்த வீட்டை முற்றுகையிட்ட அரணாயக்க பொலிசார், 52 வயது முகநூல் காதலனை கைது செய்தனர். யுவதியையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

பின்னர் யுவதியின் பெற்றோர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, யுவதி ஒப்படைக்கப்பட்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.