இனி ரயில் ஆசனப் பதிவுகளில் உறங்கல் இருக்கை இடைநிறுத்தம்!

இனி ரயில் ஆசனப் பதிவுகளில் உறங்கல் இருக்கை இடைநிறுத்தம்!


ரயில் ஆசனப் பதிவுகளின் போது உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர தபால் ரயில்களில் குறித்த உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உறங்கல் இருக்கைகளுக்கான போர்வைகளை சுத்தம் செய்யும் பணிகள் இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

$ads={1}

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இரவு நேர தபால் ரயில்களில் உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post