கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் நிபந்தனைகளுடன் நாளை திறக்க அனுமதி!

கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் நிபந்தனைகளுடன் நாளை திறக்க அனுமதி!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கம்பஹா நகரில் மூடப்பட்டிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் நாளை (22) முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கம்பஹா நகரில் உள்ள பொது சந்தை மற்றும் அதனை அண்மித்த வர்த்தக நிலையங்கள் என்பன திறக்கப்படும் என கம்பஹா நகர மேயர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பரிசோதனைகளின் அடிப்படையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்ட நபர்கள் மற்றும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நபர்கள், நாளை முதல் தமது வர்த்தக நிலையங்களை திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={1}


அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நபர்கள், தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ததன் பின்னர், வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என, கம்பஹா நகர மேயர் எரங்க சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


கம்பஹா பொது சந்தையுடன் தொடர்புடைய 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 08 ஆம் திகதி முதல் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post