வஸீம் தாஜுதீன் படுகொலை; தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் அனுர சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வஸீம் தாஜுதீன் படுகொலை; தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் அனுர சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!


பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் தகவல்களை மறைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்ப்ட்டுள்ளன.


கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த வழக்கு எதிர்வரும் மே 31ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மன்றில் ஆஜராகவில்லை. பிரதிவாதி சுகயீனம் காரணமாக மன்றில் ஆஜராகவில்லை எனவும் அவர் புற்று நோய் காரணமாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இதன்போது நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் பிரதிவாதியின் வைத்திய அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டே விசாரணைகளை மே மாதம் வரை குறித்த வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.


-எம்.எப்.எம்.பஸீர்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.