நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாணக்கியனுக்கு அழைப்பாணை!

நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாணக்கியனுக்கு அழைப்பாணை!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சைவழி பேரணியில் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவை மீறி செயற்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த அழைப்பாணை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் பொலிஸாரினால் இன்று கையளிக்கப்பட்டது.


இந்நிலையில், எந்த விதத்தில் நீதிமன்ற தடை உத்தரவு மீறப்பட்டுள்ளது எவ்வாறு என தனக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.