இரத்தினபுரி பகுதியில் முஸ்லிம் இளைஞன் உயிரிழப்பு! அடக்கமா? தகனமா? குழப்பத்தில் சுகாதார பிரிவு!

இரத்தினபுரி பகுதியில் முஸ்லிம் இளைஞன் உயிரிழப்பு! அடக்கமா? தகனமா? குழப்பத்தில் சுகாதார பிரிவு!

corona-death-srilanka-yazhnews

கொரோனா தொற்று காரணமாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் இளைஞன் உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலத்தை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பதில் சுகாதார பிரிவு குழப்ப நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இரத்தினபுரி − இறக்குவானை நகரில் இந்த கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என வர்த்தமானி வெளியாகியுள்ள நிலையில், குறித்த முஸ்லிம் இளைஞர் உயிரிழந்துள்ளார்.


வர்த்தமானி மாத்திரமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், உடலை அடக்கம் செய்யும் நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் இதுவரை வெளியிடப்படவில்லை.


$ads={1}


இந்நிலையில், குறித்த உடலை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்பது தொடர்பில் தம்மால் தீர்மானமொன்றை எட்ட முடியாதுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இறக்குவானையில் கொரோனா தொற்றினால் பதிவான முதலாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post