அமைச்சர்களின் உறவினர்களுக்கு இரகசிய கொரோனா தடுப்பூசி !!!!

அமைச்சர்களின் உறவினர்களுக்கு இரகசிய கொரோனா தடுப்பூசி !!!!

இலங்கைக்கு தருவிக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகள் அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரகசியமாக வழங்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெஷான் வித்தானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக கூறப்பட்டது. எனினும் முழுமையாக தகவல்களை ஊடகங்களில் வெளியிடவில்லை.

அமைச்சரவை தகவல்களை வெளியிடும் ஊடக சந்திப்பில், அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் தடுப்பூசி பெற்றுக்கொண்டீர்களா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட உறுப்பினர்களின் விபரங்கள் தொடர்பாக வெளியிட்ட பட்டியலில் உதய கம்மன்பிலவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இதன்மூலம் அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இரகசியமாக தடுப்பூசி பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.