இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்! தற்போதைய நிலைவரம்!

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்! தற்போதைய நிலைவரம்!


இலங்கையில் இன்றைய தினம் மேலும் 06 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதனடிப்படையில் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 409 ஆக பதிவாகியது.


பாணந்துறை பகுதியை சேர்ந்த 74 வயது ஆணொருவர், விலஓய பகுதியை சேர்ந்த 40 வயது ஆணொருவர், பிலியந்தல பகுதியை சேர்ந்த 48 வயது ஆணொருவர், கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 77 வயது ஆணொருவர், அம்பலாங்கொடை பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர், நைனாமடு பகுதியை சேர்ந்த 62 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.


அதேநேரம், இன்றைய தினம் 756 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்நிலையில், நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 77,184 ஆக உயர்வடைந்துள்ளது.


இவர்களில் 70,429 பேர் குணமடைந்துள்ளதோடு 5,949 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.