
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை அண்மையில் சந்தித்து, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது பாகிஸ்தான் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் கோரியிருந்தனர். இதன்படி குறுகிய நேரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த சந்திப்பு நடைபெறாது என பாகிஸ்தான் தூதுவரால், மேற்படி இரு தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
சந்திப்பு இரத்துக்கான காரணம் வெளியாகாத போதிலும், அரச உயர்மட்டத்திலிருந்து அவிடுக்கப்பட்ட அழுத்தத்தால் அவ்வாறு நடந்திருக்ககூடும் என நம்பப்படுகின்றது.