திருமண மற்றும் பொது நிகழ்வுகள் குறித்து இன்று எட்டப்படவுள்ள தீர்மானங்கள்!

திருமண மற்றும் பொது நிகழ்வுகள் குறித்து இன்று எட்டப்படவுள்ள தீர்மானங்கள்!


நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதிக் கிரியைகளை நடாத்துவது தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், இது குறித்து இன்று தீர்மானங்கள் எட்டப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, திருமண நிகழ்வுகளில்  கலந்துகொள்ளும் விருந்தினர்களின் எண்ணிக்கையினை 150 இல் இருந்து 50 ஆக குறைப்பது குறித்து முன்மொழியப்பட்டுள்ளது.


அத்துடன், இறுதிக் கிரியையினை 24 மணி நேரத்திற்குள் நிறைவு செய்வதற்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் திருவிழாக்களை நடாத்துவது தொடர்பிலும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


இதன்படி, இந்த விடயம் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் இன்று வெளியிடப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே மேலும்  தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.