
ஈஸ்டர் ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரிஷாம் மரூஸ் என்கிற நபரே இவ்வாறு காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் நேற்று (08) இரவு சேர்க்கப்பட்டுள்ளார் என்று அந்த வைத்தியசாலையின் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை – கல்கிரியாகம பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த நபரின் வீட்டிற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றதோடு 15 பேர் கொண்ட குழு தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.