நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!


நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டம் கட்டமாக திறக்கப்பட்டன.


இந்நிலையில், நாட்டின் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.


இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.