குழந்தைகளுக்கு நஞ்சூட்டி தானும் நஞ்சருந்தி தெருவில் விழுந்து கிடந்த தாய்!

குழந்தைகளுக்கு நஞ்சூட்டி தானும் நஞ்சருந்தி தெருவில் விழுந்து கிடந்த தாய்!

தம்புள்ளை, யாபாகம பகுதியில் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நச்சூட்டி தானும் நஞ்சருத்திய சம்பவம் ஒன்று நேற்று(15) பதிவாகியுள்ளது.

தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாகவே, குறித்த தாய் தனது ஒன்று மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார். இந்நிலையில், தாயும் இரண்டு குழந்தைகளும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான வீதியோரத்தில் இவர்கள் கீழே விழுந்த நிலையில் காணப்பட்ட போது பிரதேச வாசிகள் கண்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேலும், இரு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த யுவதியின் கணவன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தொழில் செய்பவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.