
ஹட்டன் சந்தை பச்சை மிளகாயின் கிலோவொன்றிற்கான விலை ரூ.1,000 ஆகவும், கறி மிளகாய் கிலோவொன்றின் விலை ரூ.500 முதல் 550 ஆகவும், பூசணிக்காய் கிலோவொன்றின் விலை ரூ.240 முதல் 250 ஆகவும், பாகற்காய் கிலோவொன்றின் விலை ரூ. 350 முதல் 370 ஆகவும், கரட், கத்திரிக்காய், வெண்டிக்காய் ஆகியவற்றின் கிலோவொன்றிற்கான விலை ரூ. 220 முதல் 260 ஆகவும் உயர்வடைந்துள்ளது.
இது தவிர, போஞ்சி, லீக்ஸ், கோவா போன்ற காய்கறிகளும் கிலோவொன்றிற்கு ரூ .180 முதல் ரூ. 220 அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து காய்கறி விவசாயிகள் கூறுகையில், இந்த நாட்களில் காய்கறிகளின் மொத்த விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், விற்பனையிலும் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டும் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.